அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஐதராபாத்:

கையில் வைத்திருந்த கொய்யாப்பழத்தை நகைக் கடைக்குள் தூக்கி வீசிய அந்த குரங்கு, அதை எடுக்கவரும் சாக்கில் கடைக்குள் நுழைந்தது. சுமார் 20 நிமிடங்கள்வரை கடையில் உள்ள கவுண்ட்டர்களின்மீது தாவிகுதித்து, சேஷ்டைகளை செய்துவிட்டு, கடைசியாக கல்லாப்பெட்டி இருக்கும் மேஜை மீது தாவியது.

மேஜையின் டிராயரை திறந்து, உள்ளே இருந்த பணத்தில் இருந்து ஒரு நூறு ரூபாய் கட்டை (பத்தாயிரம் ரூபாய்) மட்டும் எடுத்துகொண்டு ஓடும் குரங்கை கடையில் இருந்த ஒரு ஊழியர் மிரட்ட முயன்றார். ஆனால், அவரிடம் பிடிபடாமல் அந்த குரங்கு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

இந்த சம்பவம் குரங்கால் எதேச்சையாக நடத்தப்பட்டதா? அல்லது, திருடர்களால் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கின் கைவரிசையா? என்பது தொடர்பான பட்டிமன்றத்தை உருவாக்கியுள்ள அந்த வீடியோ.., உங்கள் பார்வைக்கு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-