அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இன்று (26-06-2016) வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது.லைலதுல் கத்ர் ஒற்றைப்படை இரவு ஆன இன்று ஸகர் சாப்பாடு சென்ற வருடம் நடந்தது போல் இந்த   ரமலானில் ஸகர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு  நமதூரில் உள்ள அனைத்து ஆண்களுக்கும்    அழைப்பு கொடுத்து இருந்தனர். திரளான சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    இந்த விருந்தானது 2006 ஆண்டு முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் இரண்டு சங்கத்து இளைஞர்களுக்கும் சஹர் விருந்து பரிமாரப்பட்டது பிறகு படிப்படியாக ஊரில் உள்ள அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் என்று வருடம் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில வருடமாக வீட்டிக்கு ஒருவர் பின் , வீட்டில் உள்ள ஆண்கள் அவைவருக்கும் என இந்த சஹர் விருந்து வளர்ந்து விட்டன.


இந்த சஹர் விருந்துக்கு கடந்த ஆண்டு போல பிரியாணி பரிமாறப்பட்டது.


  அதிகாலை 2.30 முதல் 4.15  மணி வரை இந்த விருந்து நடைபெற்றது.

இவ்விருந்தினை நல்ல உள்ளம் உள்ள சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்சியினை மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் நமது சகோதர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.

இந்த சஹர் விருந்து பற்றி அதன் நிர்வாகிகளில் ஒருவர் வி.களத்தூர் ஜாபர் அலி (முன்னாள் வார்டு உறுப்பினர்)மற்றும் வி.களத்தூர் ஜமாஅத் துணை செயலாளர் ) அவர்கள் கூறியதாவது 

V.களத்தூர் ,மில்லத் நகர் என மொத்தம் 1300 நபர்களுக்கு பிரியாணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.  சுமார் 1250 பேர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தினை ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவணாக. ஆமீன்...!  


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-