பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் முஸ்லீம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு உள்ளிட்ட இதரப் படிப்புகளில் பயில்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு, அவர்களது பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும். www.tn.gov.inbcmbcdep என்ற அரசு இணையம் மூலம் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.