அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,


பெரம்பலூர் அருகே கடன்வாங்கி தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்– மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கணவன்–மனைவி

கடலூர் மாவட்டம் வேப்பூரைச்சேர்ந்தவர் கலியன் என்பவரது மகன் மாணிக்கம் (வயது38), இவரது மனைவி திலகவதி (38)

இருவரும் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் தனியார் அறக்கட்டளை நடத்தி வந்தனர். அறக்கட்டளை அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூர் சிலோன் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி இந்திராதீபம்(38) வேலைபார்த்துவந்தார்.

மாணிக்கம் மற்றும் திலகவதி இருவரும் தங்களது அறக்கட்டளையில் ரூ.50ஆயிரம் கட்டினால், ரூ.5 லட்சமும், ரூ.10ஆயிரம் கட்டினால் ரூ.1 லட்சமும் கடன் வாங்கிதருகிறோம் என்று கூறி வாலிகண்டபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பலரிடம் 2015–ம்ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.65லட்ச ரூபாய் வசூலித்தனர். 3 மாதத்தில் கடன்வாங்கி தந்துவிடுகிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்தனர்.

கொலை மிரட்டல்

இதை நம்பிய இந்திரா தீபம் மற்றும் சுயஉதவிக்குழுவினர் பலர் மாணிக்கம் மற்றும் திலகவதியிடம் இந்த பணத்தை கொடுத்தனர்.

ஆனால் 3 மாதங்கள் கடந்தும் கடன் பெற்றுத்தருவதற்கான எவ்வித நடவடிக்கையும் மாணிக்கம் தம்பதியினர்மேற்கொள்ளவில்லை. இந்திராதீபம் மற்றும் சுயஉதவிக்குழுவினர் பணத்தை கேட்டபோது இந்திராதீபத்தை அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இந்திராதீபம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திராவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 406, 470, 420, 506 (1) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துமாணிக்கம்–திலகவதி தம்பதியினரை நேற்று கைது செய்தனர். கைதான இருவரும் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-