அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை : மூடப் பட்ட 500 டாஸ்மாக் கடைகள் குறைந்த விற்பனையாகும் கடைகள் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சென்னை தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், டாஸ்மாக் மதுபான கடைகள் 500ஐ மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் 500ஐ மூடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இந்த 500 கடைகளில் பெரும்பாலான கடைகள் நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் கூட மதுபானம் விற்பனையாகாத கடைகள். இதனால், இந்த கடைகளை ஒட்டிய பார்கள் அனுமதிக்கும் ஒப்பந்தம் கோரினாலும், ஏலத்தில் கலந்து கொள்ள யாரும் வருவதில்லை.

மேலும், சில கடைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ளவை. இக்கடைகளை மூடச் சொல்லி மாணவர்கள் அவ்வப்போது போணராட்டங்களில் ஈடுபடுவது, கடைகள் மீது கல்வீசி தாக்குவது போன்ற சம்பவங்களால், கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர் காவல் பாதுகாப்பு அளிக்க வேண்டி உள்ளது என்பதால் அக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகளை மூட, தேசிய நெடுஞ்சாலைத் துறையும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தன. இதனால் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பல கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 6,823 கடைகளில் தற்போது 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளில் தினசரி அதிக மது விற்பனையாகாத கடைகளின் எண்ணிக்கை அதிகம். மேலும், தற்போதுள்ள கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.65 கோடி முதல் 70 கோடிவரை வருவாய் கிடைத்து வருகிறது.

500 கடைகள் மூடப்படுவதால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடிவரை இழப்பு ஏற்படலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளகடைகள் விற்பனை இல்லாத, லாபம் ஈட்டாத கடைகள்தான். எனவே இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பே என்று மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.  

சென்னையில் மூடப்பட்ட கடைகள்: சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் அருகில் 2 கடைகள், அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகம், ரிப்பன்மாளிகை எதிரே உள்ள கடை, பெரம்பூரில் ஒரு கடை, வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் அருகில் இருந்த கடை, கே.கே.நகர் நெசப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைகள் என 7 கடைகள் மூடப்பட்டன.-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-