அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
முப்பரிமாண அச்சு முறை மூலம் பெரிய கட்டடங்களை கட்ட முடியும். இதற்கு கான்கிரீட் கலவையை கையாளும் அளவுக்கு, 20 அடி உயரமும், 40 அடி அகலமும், 120 அடி நீளமும் உள்ள ராட்சத, '3டி பிரின்டர்' தேவை. அப்படி ஒரு, 3டி கட்டட அச்சு இயந்திரத்தை வைத்து தான், துபாயில், 'ஆபீஸ் ஆப் தி ப்யூச்சர்' என்ற கட்டடத்தை சமீபத்தில் கட்டியிருக்கின்றனர். முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் முழுமையாக கட்டப்பட்ட முதல் அலுவலகம் இதுதான் என்று, துபாய் அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. இந்த நவீன கட்டடத்தை, ஐக்கிய அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்டூம் திறந்து வைத்தார்.
கட்டடம் கட்டுவதற்கான சிறப்பு, 3டி பிரின்டர் வேறு ஒரு இடத்தில் கட்டடத்தின் பாகங்களை தனித் தனியாக வார்த்தெடுக்க, அதை துபாயின் மையப் பகுதியில் கொண்டு வந்து பொருத்தியது ஒரு பொறியாளர்கள் குழு. சரியாக, 17 நாட்களில் கட்டடத்தை முப்பரிமாண அச்சு இயந்திரம் முடித்துவிட்டதாக துபாய் அரசின் இணையதளம் தெரிவிக்கிறது. கட்டட வேலை முடிந்ததும் மின்சார இணைப்பு, உள் அலங்காரம் போன்ற வேலைகள் சில நாட்களில் முடிந்தன.
இந்த, 250 சதுரமீட்டர் பரப்பளவுள்ள கட்டடத்தில் அலுவலக அறைகள், ஆலோசனை கூடம், கழிப்பறைகள் என்று சகலமும் உண்டு. துபாய் அரசு, 3டி பிரின்டிங் துறை மீது ஒரு கண் வைத்திருக்கிறது. வரும், 2030க்குள் கட்டடத் துறை, மருத்துவத் துறை மற்றும் நுகர் பொருட்கள் துறை ஆகிய மூன்று துறைகளிலும், 3டி பிரின்டிங்கிற்கான உலக மையமாக துபாய் இருக்க வேண்டும் என்று, துபாய் அரசு வியூகம் வகுத்திருக்கிறது. அதன் முதல் படி தான் இந்த, 3டி அலுவலக கட்டடம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-