அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 37 பேர் உடல் சிதறி பலியாகினர். 100 பேர்க்கு மேல் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.துருக்கியில் உள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 65 பேர் உடல் சிதறி பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகை பகுதி அருகே உள்ள எக்ஸ்.ரே செக்யூரிட்டி அறை அருகே குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்தான்புல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-BBC

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-