அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
குவைத்தில் சூடு அதிகமானதை அடுத்து

திறந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு கோடை வெயில் காலத்தில் வரும் வருடமாக வழங்கப்படும் தடை நடைமுறைக்கு வந்துள்ளது:

வளைகுடா நாடுகளில் வெயில் காலத்தில் சூடு அதிகமாகும் நேரங்களில் பகல் நேரத்தில் தொழிலாளர்கள் வேலை செய்ய சில மாதங்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் குவைத்தில் தற்போதே வெப்பம் அதிகமான நிலையில் திறந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு கோடை வெயில் காலத்தில் வரும் வருடமாக வழங்கப்படும் தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் படி இந்த தடை உத்தரவு நேற்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு(ஆகஸ்டு -31 வரை) நடைமுறையில் இருக்கும். இந்த மாதங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி தடையினை மீறி தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் கம்பெனிகளின் ஆவணங்கள் ரத்து செய்யபடும் என்று

Kuwait Manpower Authority-யின் தலைமை

அதிகாரி அகமது- அல்- மூஸா தெரிவித்துள்ளார்.

இது கடுமையான நடைமுறையில் இருக்கும் என்றும். இதை கண்காணிக்க தனிகுழு அமைக்கப்பட்டுள்து. குவைத்தின் அனைத்து பகுதியையும் தீவிரமாக கண்காணிக்கும்.

இப்படி வேலை வாங்கி பிடிபட்டால். தொழிலாளிக்கு ஒன்றுக்கு 100 குவைத் தினார் வீதம் கம்பெனிக்கு பிழையும் மற்றும் கம்பெனிகளின் ஆவணங்கள் அனைத்தும் ரத்தும் செய்யபடும் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-