துபாயில், ஒரு மணி நேரத்திற்கு 300 கிலோ
மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில்
பயணம் மேற்கொண்ட 80 க்கும் மேலான
கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்
துள்ளனர்.
காவல்துறை தலைமை அதிகாரி கமிஸ் அல்
முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம்
தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாக
னங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்
றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
துபாய் காவல்துறை அதிகாரிகளின் வாகன
ங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான
லம்போகினி, போர்ஷே, மற்றும் ஆஸ்டன்
மார்டின் ஆகியவையும் அடங்கும்.
இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட
விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின்
கார்களை துரத்திப் பிடித்தனர்.
துபாயில் சட்டவிரோதமாக பந்தயத்தில் ஈடு
படுபவர்களுக்கு 27 ஆயிரம் டாலர்கள் வரை
அபராதம் விதிக்கப்படும் என ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.