அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் குர்ஆன் மனனப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறுவது 20 ஆம் ஆண்டு மனனப்போட்டியாகும்.

இப்போட்டிக்கு 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து ஹாபிழ் முகமது தாஹா மகபூப் மட்டுமே கலந்து கொள்கிறார்.

பிறவியில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான முகமது தாஹா மகபூப் கேரளா மாநிலம் மலப்புரம் ஓமச்சம்புழை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் -மரியம் தம்பதியர் மகனாவார்.

கேள்வி ஞானத்தை கொண்டு சிறுவயதில் இருந்தே குர்ஆனை ஆர்வமுடன் மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடாமுயற்சியால் சிறந்த ஒரு ஹாபிழாக உருவாகியுள்ளார்.

போட்டியில் பங்கேற்க வந்த முகமது தாஹா மஹ்பூபை போட்டி ஏற்பாட்டாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று நேரடியாக வரவேற்று கௌரவப்படுத்தியுள்ளனர்.

நன்றி : குளச்சல் அஜீம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-