அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் 20-ஆம் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த ‘ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்’ அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.


துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் 20-ஆம் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த ‘ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்’ அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் தினமும் நடைபெற உள்ளன.

அரபி ஆங்கிலம் தவிர தமிழ், மலையாளம், பங்காளி மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டின் வரவேற்பையடுத்து இந்த ஆண்டும் அரபி மொழியில் எழுத்தணிக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது.

இந்த சர்வதேச குர்ஆன் போட்டி இன்று 12 ஜூன் 2016 இரவிலிருந்து ஆரம்பமாகிறது. ரமதான் ஏழில் தொடங்கி இருபது வரை நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 92 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் 500 கேள்விகள் தயார் செய்து வைத்துள்ளனர். ஆரம்பத் தகுதி சுற்றில் தகுதிப் பெற்றவர்களுக்கு இறுதிச் சுற்றில் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அதில் இரண்டு கேள்விகள் மதியம் அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் கேட்கப்படும். மற்ற மூன்று கேள்விகள் துபாய் சேம்பர் அரங்கத்தின் மேடையில் எல்லோர் முன்னிலையிலும் கேட்கப்படும்.

20-ஆம் சர்வதேச குர்ஆன் போட்டியின் நடுவர்களாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அதெல் பின் இப்ராஹிம் முஹம்மது ரிஃபாய், அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் அப்துல்லாஹ் அல் அலி, எகிப்தைச் சேர்ந்த ஷேக் அய்மன் அகமது முஹம்மது சயீத், குவைத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் அஜீஸ் ஃபாதெல் மத்தார் ஃபஹத் அல் அன்ஸி, சிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் மற்றும் சூடானைச் சேர்ந்த ஷேக் அலி முஹம்மது அல் ஸைன் மஸ்ரூவி.

உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்த சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.

-ஜெஸிலா பானு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-