அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்து வருகின்றனர். முக்கியமாக ஸ்மார்ட்போன் பயனர்கள் மற்றும் புதிய இணைய பயனர்களால் இந்தியாவில் இணையம் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த இணைய வளர்ச்சி நிச்சயமாக எதிர்காலத்திலும் இருக்கும், ஏனென்றால் இன்னும் இணையத்தை சுவைக்காத நிறைய பேர் இந்தியாவில் உள்ளனர்.

இது உலகின் மிகப் பெரிய நெட்வொர்கிங் (networking) நிறுவனமான Cisco, உலகளாவிய IP networks வளர்ச்சி குறித்து கணித்து Visual Networking Index -ஐ வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இணையம் 2020-ல் எப்படி இருக்கும் என்பதை வெளியிட்டுள்ளது.


சுவாரஸ்யமான இந்திய இணைய கணிப்புகள்

2015 ஆம் ஆண்டு 327 மில்லியன் ஆக இணையத்தை பயன்படுத்துவோரின் (internet user) எண்ணிக்கை 2016 இல் 603 மில்லியனாக அதிகரிக்கும்.

2015 ஆம் ஆண்டு 239.4 மில்லியன் ஆக இருந்தஸ்மார்ட்போன் (smartphone)பயனாளர்கள், 2020 ஆம் ஆண்டு 37% அதிகரித்து 702.1 ஆக அதிகரிப்பார்கள்.

69% நெட்வொர்க் சாதனங்கள் (networked devices) 2020 ல் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

5.1 Mbps ஆக இருக்கும்சராசரி பிராட்பேண்ட் வேகம் (average fixed broadband speed) 2.5 மடங்கு அதிகரித்து 2020 ஆம் ஆண்டு 12.9 Mbps ஆக அதிகரிக்கும்.

2015 ஆம் ஆண்டு இருந்தசராசரி மொபைல் இணைப்பு வேகம் (average mobile connection speed) 3 மடங்கு அதிகரித்து 2020 ஆம் ஆண்டு 3 Mbps ஆக இருக்கும்.

2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் 946 Petabytes ஆக இருக்கும் internet traffic 2020 ஆம் ஆண்டு 4.1 Exabytes ஆக உயரும்.

2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் 149 Petabytes ஆக இருக்கும் Mobile data traffic 2020 ஆம் ஆண்டு 1. 7 Exabytes ஆக உயரும்.2015 ல் மொத்த internet traffic கில் மொபைல் மூலம் பயன்படுத்தும் இணையம் 15.7% ஆக இருந்தது. இது 2020 இல் மொபைல் பங்கு 41.7% ஆக இருக்கும்.

1.9 பில்லியன் நெட்வொர்க் சாதனங்கள் (networked devices) 2020 ல் இருக்கும். 2015 ஆம் ஆண்டு 1.3 பில்லியன் இருந்தது.

2020 ல் மொத்த internet traffic கில் Internet video traffic 75% ஆக இருக்கும். இது 2015 ஆம் ஆண்டு Internet video traffic 51% ஆக இருந்தது.

சராசரி வைஃபை (Wi-Fi) வேகம் 3.3 Mbps லிருந்து 2020 ஆம் ஆண்டு 7 Mbpsஆக அதிகரிக்கும்.

IP traffic 2015 ஆம் ஆண்டை விட 2020 ல் 4 மடங்கு அதிகரிக்கும்.

Internet gaming traffic 2015 ஆம் ஆண்டை விட 2020 ல் 7 மடங்கு அதிகரிக்கும்.

Courtesy Thanks: http://tamilentrepreneur.com/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-