அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜித்தா: பல ஆண்டுகள் தங்களிடம் விசுவாசமாக பணியாற்றியவர்களை சிறிது உடல் நல குறைவு ஏற்பட்டாலும் கிள்ளுகீரையாக நினைத்து தூக்கி எறிபவர்கள் இருக்கு இவ்வுலகில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணி பெண்ணை சவூதி அரேபியா குடும்பம் ஒன்று 19 ஆண்டுகளாக கவனிக்கும் பராமரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் எத்தியோப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு பணிப்பெண்ணாக சவூதியில் பணியாற்ற வந்துள்ளார். சில மாதங்களில் அவருக்கு பக்க வாதம் நோயால பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் போய் விட்டது. மருத்துவமனையில் சேர்த்து சில மாதங்களுக்கு சிகிச்சையளித்த பணிபெண்னை வேலைக்கு சேர்த்த வீட்டின் உரிமையாளர் மருத்துவ செலவுகளை செய்தததோடு மேலும் அப்பெண்னின் வேலைக்கான‌ விசாவை புதுபிக்க விரும்பவில்லை பணிபெண்ணின் பரிதாப நிலையை அறிந்த உரிமையாளரின் மற்றொரு நண்பர் சவூதியை சேர்ந்த சலா அல் சுயோபி தனது குடும்பத்துடன் அப்பெண்னை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

மருத்துவமனையில் அப்பணிபெண், சலா அல் சுயோபி குடும்பத்தினரிடம் விசாவை நீடித்து தரும் படி கேட்டு கொண்டார். சலா அல் சுயோபி தனது குடும்பத்தினரோடு ஆலோசனை செய்து அப்பெண்னை தங்களுடைய ஆதரவு விசாவில் மாற்றி விசாவை நீடிப்பதற்கும் அப்பெண்ணின் மருத்துவ செலவையும் ஏற்று கொள்ள முடிவு செய்தனர் . அதன் படி அப்பெண்ணுக்கு தங்களுடைய ஆதரவில் விசாவை மாற்றியதோடு செயல்பட‌ முடியாத அப்பெண்ணை கடந்த‌ 19 வருடங்களாக தங்கள் குடும்பத்தில் ஒருவராக சேர்ந்து அப்பெண்ணின் மருத்துவ செலவுகள் முழுவதையும் ஏற்று இன்று வரை பராமரித்து வருகின்றனர்

இது குறித்து சலா அல் சுயோபி கூறியதாவது
அப்பெண்ணை எனது மனைவி சொந்த சகோதரி போன்றி கவனித்து வருகிறார். பலர் இதனை சுமையாக நினைப்பார்கள் நாங்கள் அப்படி நினைக்கவில்லை இதனை எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவும் கருதி மகிழ்ச்சியாக செய்து வருகிறோம் அவர் கடைசி காலம் வரை எங்களோடு இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-