
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கல்யாண்நகரைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஓமன் நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இவரது மனைவி செல்வராணி (வயது30), உறவினர் ஜெயா மற்றும் குடும்பத்தினர் வீட்டின் கீழ்தளத்தை பூட்டிவிட்டு மாடியில் தூங்கிகொண்டிருந்தனர். அதிகாலை கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டுஉடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடி செல்லப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து செல்வராணி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டா கார்த்திகேயனி நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.