அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாய் இந்திய தூதரகம் மற்றும் துபாய் விளையாட்டு கவுன்சில் இணைந்து துபாயில் சர்வதேச யோகா தினம் கொண்டாட உள்ளதாக துபாய் இந்தியா துணை தூதர் அனுராக் பூஷன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது துபாய் உலக வர்த்தக மையத்தில் ஜூன் 18 அன்று இரவு 7 மணியளவில் யோகா தொடங்குகிறது விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இருந்து பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள்.துபாய் அரசாங்க ஆதரவுடன் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. யோகா, மனம் மற்றும் உடலை வலிமைபடுத்துகிறது ,பல்வேறு நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது பல்வேறு தேசிய இனங்கள் கடந்து ஆண்டுதோறு யோகா பிரபலமடைந்து வருகிறது என்பதை குறிக்கிறது.சென்ற ஆண்டு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள் அதே போன்று இவ்வாண்டும் நடைபெறும் என்றார்.

மேலும் மன அழுத்தம் குறைக்கும் வகையில் பணியிடங்களில் அமர்ந்து கொண்டே பயிற்சி செய்ய முடியும் ஒரு யோகா பயிற்றுநர் அனைவருக்கும் முன் நின்று பயிற்சியளித்தார். பிரதமர் மோடியின் முயற்சியில் முதல்முறையாக சென்ற ஆண்டு ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-