அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன்.14-
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
தமிழக முதல்-அமைச்சரால் 110 விதியின் கீழ் பெரம்பலூரில் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூரில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 28.12.15 அன்று தமிழக முதல்-அமைச்சரால் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் திறந்து வைக்கப்பட்டது.
கால அவகாசம் நீட்டிப்பு
மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் 2016-17-ம் ஆண்டு பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக மாவட்ட மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் வருகிற 17-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆதிதிராவிடர்¢, பழங்குடியினர், அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர்கள் சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல் காண்பித்து ரூ.250-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மற்ற அனைத்து பொதுப்பிரிவு வகுப்பை சார்ந்தவர்கள் ரூ.500-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-