அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தெலுங்கானா மாநில அரசின் இஃப்தார் நிகழ்ச்சி - அசத்துத்தீன் உவைஸி பங்கேற்பு....!!

தெலுங்கானா மாநில அரசின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளிக்க மாநில முதல்வர் சந்திரசேகரராவ் ஏற்பாடு செய்தார்.

இஃப்தார் விருந்தில் முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொண்டார்.

இஃப்தார் விருந்திற்கு மஜ்லீஸ் கட்சி தலைவரும், ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினருமான அசத்துத்தீன் உவைஸி அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

ஏராளமான இஸ்லாமியர்கள் இஃப்தாரில் கலந்து கொண்டனர்.

அசத்துத்தீன் உவைஸி நோன்பை திறந்தபோது முதல்வர் சந்திரசேகரராவ் பழங்கள் ஊட்டி விட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகரராவ் பேசுகையில்...

இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மாநில அரசு சிறுபான்மை மக்களுக்கு உரிய உரிமைகளை முறையாக வழங்கி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை வந்தவுடன் 12 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-