அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்

1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா

பொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன? அதிக மெகாபிக்சல் இருந்தால் அது தான் சிறந்த தரத்துடன் உள்ள கேமரா, என்று நினைக்கிறார்கள். ஆனால் சென்சார், லென்ஸ் , போகஸ் நீளம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெப்லைசேஷன்(optical image stabilizatio) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் கேமராவின் தரம் மாறுபடுகிறது.

நோக்கியா 40 மெகா பிக்சல் கேமராவை தனது போனில் அறிமுகம் செய்தது. ஆனால் அந்த கேமராவை விட ஐபோனின் 8 மெகா பிக்ச்ல் கேமரா சிறந்ததாக இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

2. நீங்கள் வாங்கிய மொபைல் போனுக்கு அதே நிறுவனத்தின் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

போனை விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் பாக்கெட்டை நிரப்புவதற்காக கூறும் விஷயம் தான் இவை. நீங்கள் அந்த நிறுவனத்தின் சார்ஜர் உள்ளிட்ட பலதர பொருட்களை பயன்படுத்தினால்தான் அவர்களுக்கு லாபம். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களுக்கு ஒரேமாதிரியான சார்ஜ் போர்ட் தான் உள்ளது. மேலும் அதேமாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜர்கள் சீன தயாரிப்பில் மலிவான விலையில் கிடைக்கின்றன. அதையே பயன்படுத்தலாம் என்று சந்தையாளர்கள் கூறுகின்றனர்.

3. இந்த ஸ்கிரீன் கார்டு ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும்

இந்த ஸ்கிராட்ச் கார்டை போனில் ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய். போன் புதிதாக வாங்கும் போது ஸ்கிரீன் பாதுகாப்புக்கு பிளாஸ்டிக் சீட் ஓட்டப்பட்டிருக்கும். ஆனால் நாளடடைவில் அதில் கீரல்கள் விழுந்துவிடுகிறது. எனவே புதிய சீட்டை வாங்கி எளிதாக ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் கொரில்லா கிளாஸ், இது தொழில்நுட்ப ரீதியான கிளாஸ் என்ற பெயரில் அதிகவிலைக்கு பிளாஸ்டிக்கள் விற்கப்படுகின்றன. அவற்றை ஒட்டினால் ஸ்கிராட்ச் ஆகது என்பதொல்லாம் சுத்த பொய்.

4.உங்கள் போன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது

உங்கள் போன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரங்களை அள்ளிப்போடும் சாப்ட்வேர்கள் இணைத்தில் உலா வருகின்றன. ஆன்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம், Linux kernelயை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. Linux kernelஇல் வைரஸ் வேலை செய்யாது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதேநேரம் உங்கள் போன் தீங்கிளைக்கும் மென்பொருளால்( malicious software) பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்இந்த வைரஸ் மற்றவர்களின் போன்களுக்கு பரவாது. நீங்கள் கூகுள் பிளே (google play) ஸ்டோரில் மட்டும் உங்களுக்கு தேவையான ஆப் மற்றும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மாறாக மற்றவற்றில் டவுன்லோடு செய்தால்தீங்கிளைக்கும் மென்பொருளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

உங்கள் போனை, லேப்lடாபிலோ அல்லது யுஎஸ்பி மூலம் இணைக்கும் போது நிச்சயமாக வைரஸ் உங்கள் போனுக்கு வராது.

5. உங்கள் பேட்டரியை பாதுகாக்க இந்த பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள்

உங்கள் பேட்டரியை பாதுகாக்க பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள் என்று பல விளம்பரங்கள் உங்கள் மொபைல் போனில் குவியும். இவை உண்மையில்லை. ஆப் டெவலப்பர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற ஆப்களை இலவசமாக விடுகிறார்கள். இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி எக்ஸ்ட்ரா டைம் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உங்கள் போனிலேயே அதற்கான ஆப்சன்கள் நிச்சயம் இருக்கும்.அந்த வழிமுறைகளை பின்பற்றினாலேயே போன் பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். எனவே மூன்றாம் தர ஆப்களை டவுன்லோடு செய்யாதீர்கள்

6. உயர்ந்த வரியறை(specs) இருந்தால் சிறப்பாக செயல்படும்

உங்கள் போனில் octa-core processor உள்ளதா? நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் போனுக்கு உயர்ந்த specs இருந்தால் சிறப்பாக செயல்படும் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.

7. ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும்.

ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் என்று கூறினால் நம்பாதீர்கள். நீங்கள் போனை பயன்படுத்தும், அதன் பின்புலத்தில், லைட் சென்சார் வேலை செய்யும். எனவே பேட்டரியில் இருந்து அதிகப்பட்டியான எனர்ஜி செலவழியும். எனவே நீங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் உங்கள் கண்பார்வையை பாதிக்காத வகையில், brightness வைத்துக்கொள்ளுங்கள்

8. Bluetooth/WiFi டைரெக்டாக இருந்தால் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.

WiFi நேரடியாக இருக்கும் போது அதிகப்பட்டியான பைல்களை மாற்றும் போது உங்கள் போன் வேகமாகத்தான் இருக்கும். Xender, SHAREit உள்ளிட்டவை உங்கள் WiFi நேரடியாக இருக்கும் போது பாதுகாக்கிறன்றன. ஆனால் அவற்னை ஆன் செய்தே வைத்திருந்தால் தான் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.

9. இவற்றின் மூலம் Closing apps ஆப்களை மூடினால் உங்கள் போன் வேகமாக செயல்படும்.

நீங்கள் பயன்படுத்திய சமீபத்திய ஆப்களை அப்படியே மூடமால் விட்டிருப்பீர்கள், அவை உங்கள் போனின் ரேமை உறிஞ்சிக்கொண்டிருக்கும். அப்போது அவற்றை மொத்தமாக ஆட்டோமேட்டிக்காக மூட சில ஆப்கள் இருப்பதாக வருகின்றன. ஆனால் அவற்றால் எந்த பயனும் இல்லை . பணம் சம்பாதிக்கவே அத்தகைய ஆப்கள் வெளியிடப்படுகின்றன.

10. இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும்

இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும் என்று சிலர் கட்டுக்கதை கூறுவார்கள். இவை முட்டாள்தனமானவை. ஒரு முறை போனில் சார்ஜ் நிறைந்துவிட்டால், அதன்பிறகு ஆட்டோமேட்டிக்காக சார்ஜருக்கும், பேட்டரிக்கும் இடையேயான தொடர்ப்பு கட்டாகும் வகையில் வல்லுநகர்கள், உருவாக்கியிருப்பார்கள்.எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-