அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பலைவனப் பிரதேசமான அராபிய அமீரக நாடுகளில் நிலவிவரும் வறட்சியைப் போக்கி மழையை அதிகரிக்க வைக்க செயற்கை மலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அபுதாபி:

ஐக்கிய அராபிய அமீரக நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக வெப்பத்தின் அளவு வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நீராதாரங்கள் அனைத்தும் வறண்டும், விளைநிலங்கள் காய்ந்துக் கருகியும், உணவுப்பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு அதிகரித்தும் வருகிறது.

இந்தநிலையை சமாளிக்கும்பொருட்டு செயற்கையான பச்சைப்பசேலென செயற்கை மலைகளை உருவாக்க ஐக்கிய அமீரகம் திட்டமிட்டுள்ளது. இதனால், மழை பற்றாக்குறை நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும் என அந்த நாடுகள் கணக்கிட்டுள்ளன.

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக ஒரு செயற்கை மலை உருவாக்க தீர்மானிக்கப்பட்டு, அமெரிக்காவை சேர்ந்த சுற்றுப்புறசசூழல் ஆய்வு பல்கலைக்கழக நிபுணர்களிடம் இதற்கான முழுபொறுப்பும் ஓப்படைக்கபட்டுள்ளது. இதுகுறித்து இந்த குழுவினர் தற்போது ஆய்வுசெய்து வருகின்றனர்.

இந்த பசுமைவாய்ந்த மலைகளால் காற்று குளிர்ச்சியடைந்து மழைமேகங்கள் உருவாக வாய்ப்பு உண்டு எனவும் இதனால் மழையின் அளவு அதிகரிக்கலாம் என்றும் இந்த ஆய்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-