அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உரிய ஆவனங்கள் சமர்ப்பித்து, கைரேகைகள் பதிவு செய்யப்படாத சிம்காட்கள் முடக்கப்படும் என சவுதி அரேபியாவின் மிகப் பெரும் தொலைபேசி வலையமைப்பான சவுதி டெலிகொம் தெரிவித்துள்ளது.

சவுதி டெலிகொம் ( STC) உப தலைவர் பைசல் அல் ஜபர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது அனைத்து (STC) சிம் பாவனையாளர்களுக்கும் சிம்களை தங்களது பெயரில் பதிவு செய்யுமாறும், கைரேகைகளை பதிவு செய்யுமாறும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது அதனை ஒரு பொருட்டாக கருதாத அனைத்து சிம்களும் முடக்கப்படும். ஆகவே உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உங்களது சிம்களை உங்கள் பெயரில் பதிவு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

சவுதியில் அதிகமானோர் Black Market இல் பதிவு செய்யப்படாத சிம்களைப் பெற்று அதனை தனது சொந்தப் பெயரில் மாற்றாது பாவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-