அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

செம்பட்டு, மே.7-
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெருமத்திநல்லூரை சேர்ந்த ராசலிங்கத்தின் மகன் சின்னதுரை (வயது 24). இவர் சவுதிஅரேபியாவில் ரியாத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி சாலை விபத்தில் இறந்தார். அவரது உடலை பெற்றுத்தர கோரி இந்திய தூதரகத்தினரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முறையிட்டனர். இதையடுத்து தூதரக அதிகாரிகள் அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு சின்னதுரையின் உடலை பெற்று சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். இதன் மூலம் சின்னதுரையின் உடல் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தது. விமானநிலையத்தில் உடலை அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பெற்று வேன் மூலம் சொந்த ஊர் கொண்டு சென்றனர்.
இது பற்றி வி.களத்தூர் சனா முஹம்மது பாருக் இடம் கெட்ட போது
நமது ஊருக்கு அருகில் உள்ள நல்லூர் கிராமத்தின்  சின்னதுரை என்ற 24 வயது சகோதரர் இரண்டு வருடமாக சவுதியில் டிரைவராக பணிபுரிந்து கடந்த ஏப்ரல் 14 அன்று வாகன விபத்தில் மரணமடைந்தார். சவுதியில் உள்ள இந்திய சோசியல் போரம் (ISF) முயற்சியால் அவரது உடல் இன்று திருச்சி கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் SDPI கட்சி திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்றுகொண்டனர்.  எங்களது அவசர ஊர்தி வாகனத்தில் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம். ஊருக்கு வெளியே காட்டில் தனியாக ஒரு வீடு. உடலை இறக்கினோம். உறவினர்கள் கதற தொடங்கினார்கள். நாங்கள் விடைபெறலாமா என்று வினவினோம்? இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். இங்கு வாகன வசதி இல்லை ஆதலால் தாங்கள் காத்திருந்து இடுகாடு வரை உடலை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள்.

நாங்களும் காத்திருந்தோம். சிறிது நேரம். அதிக நேரமாகிவிட்டது. அந்த சிறிய கிராமத்தில் பள்ளிவாசல் இல்லாததால் ஜும்மா தொழுக முடியவில்லை. உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இடுகாடு வரை உடலை ஏற்றிக்கொண்டு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினோம். வரும் வழியில் சின்னாறு பள்ளியில் தொழுதுவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது சரியாக மணி மாலை நான்கு. இறந்தவரின் தந்தை பாமக கட்சிக்காரர். அவரின் சட்டைப்பையிலும், வீட்டின் கொடிகம்பத்திலும் அது பிரதிபலித்தது. இறந்தவரின் சித்தப்பா பாஜக வின் மாவட்ட பொறுப்பில் உள்ளவர். அவரிடம் ஆறுதலாக பேசிவிட்டு கிளம்பினோம். பலரும் இணக்கமாகவும், நன்றியுடனும் பேசினார்கள்.

SDPI கட்சியின் சாதி, மதங்களை கடந்த செயல்பாடுகளுக்கும், கட்சி விருப்பு, வெறுப்பற்ற பார்வைக்கும், மனித நேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் இந்த சம்பவம் ஒரு சிறு துளிதான்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-