அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு முழு விவரம்: கிழக்கு மண்டலம்

இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, தினமலர் நாளிதழுடன் இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

நேற்று தென் மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இன்று கிழக்கு மண்டல முடிவுகள் வெளியாகியுள்ளன. நியூஸ் 7 தமிழ், தினமலர் தேர்தல் கருத்துக் கணிப்பின்படி, கிழக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 30 தொகுதிகளையும், அதிமுக 9 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது.

பாமக 2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் உள்ள 4 தொகுதிகளையும் அந்த கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளை திமுக கைப்பற்றும் எனவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றுவும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 தொகுதிகளிலும், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் தொகுதிகளில் பாமக வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-