அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் ஒருபெண், தனது கணவர் புதுமனைவியுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற ஆத்திரத்தில் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் ஒருபெண், தனது கணவர் புதுமனைவியுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற ஆத்திரத்தில் வீட்டை எரித்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


ஏமன் நாட்டின் எல்லையோரம் உள்ள சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜிஸான் பகுதியில் வசித்துவரும் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இந்தப் பெண்ணின் கைபேசிக்கு அவரது கணவர் ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.


இரண்டாவதாக வேறொரு பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன். அவளுடன் தேன்நிலவு கொண்டாட வெளிநாட்டுக்கு செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என வந்திருந்த அந்த குறுந்தகவலை பார்த்த மனைவி ஆத்திரத்தில் கொதித்து, குமுறினார்.


தனக்கு துரோகம் செய்த கணவனை பழிவாங்க நினைத்த அவர், காருக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வீட்டின்மீது ஊற்றி தீயிட்டு எரித்தார்.


இருப்பினும், அழகான வீடு எரிவதை கண்டு மனம் பொறுக்க முடியாமல் கூச்சலிட்டார். அவரது சப்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர், தீயை அணைத்து கட்டுப்படுத்தியதால் வீடு ஓரளவுக்கு தப்பியது.


இந்த தீயில் அவரது ஐந்துவயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வ்ழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-