அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 74 துணை ராணுவத்தினர் கண்காணிப்புக் குழுவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 6 பறக்கும் படை குழுக்களும், தலா 6 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் பேரவைத் தொகுதிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர். சேகர் (9842090551), ஆர். ரெங்கநாதன் (9787657946), வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி (9443440444) ஆகியோர் தலைமையிலான 3 குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளனர்.குன்னம் பேரவைத் தொகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி (9442413273), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம் (9443454687), குருநாதன் (9751516795) ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலுர் மற்றும் குன்னம் தொகுதிகளில் தலா 6 பறக்கும் படைகளும், தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், தலா 2 விடியோ சர்வைலன்ஸ் குழுக்களும் என மொத்தம் 22 குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-