அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வங்கியாளர்களின் சேவைக் குறைபாட்டைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் வங்கி கேட்டை பூட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குன்னம் அருகே துங்கபுரம் கிராமத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு சேவைக் குறைபாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த வங்கியில், அவசரத் தேவைக்கு நகைக் கடன் கேட்டால் 3 நாள்களுக்குப் பிறகே தொகை வழங்கப்படுகிறதாம். அதேபோல, தொகையை செலுத்தி நகையை திரும்பக் கேட்டால் 3 நாள்களுக்குப் பிறகே வழங்கப்படுகிறதாம். மேலும், பயிர் மற்றும் விவசாயக் கடன்களுக்கும் காலதாமதம் ஏற்படுகிறதாம். இதுகுறித்து வங்கியாளர்கள் உரிய பதில் அளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டும் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த குன்னம் போலீஸார் வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வங்கி திறக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-