அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநித்துவம் அதிகரித்து வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் நமது நிலை நாளுக்கு நாள் பரிதாபமாகவே ஆகிவருகிறது...

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் முஸ்லிம்களின் வெற்றி செய்திகளை இணையத்தில் கண்டேன்...

1. மேற்குவங்காளம் 294 MLA க்களில் 56 முஸ்லிம்கள் 19%
2. கேரளம் 140 MLA க்களில் 30 முஸ்லிம்கள் 21%
3. அஸ்ஸாம் 126 MLA க்களில் 29 முஸ்லிம்கள் 23%
4. பாண்டிசேரி 30 MLA க்களில் 2 முஸ்லிம்கள் 7%
5. தமிழ்நாடு 234 MLAக்களில் 5 முஸ்லிம்கள் - 2%.
1952ல் முஸ்லீம் லீக் தமிழக சட்ட மன்ற எதிர் கட்சியாக செயல் பட்டது.

ஒரு சமயத்தில் தமிழக சட்டசையில் 20 முஸ்லிம்கள் வரை இருந்துள்ளார்கள் என்றும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது... ஆனால் இன்றைய நிலைமை வெறும் ஐந்தாக குறைந்து போய்விட்டது ...

தனிமனித ஈகோவினாலும் , இயக்க வெறிகளாலும், தமிழ்நாட்டில் முஸ்லிம் இயக்கங்கள்தான் அதிகரிக்கிறதே தவிர வேறு எதுவும் உருப்படியாக தெரியவில்லை ... உருப்படியான தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை....

தேசிய அரசியலின் நீரோட்டத்தில் தமிழக முஸ்லிம்களின் பங்கு இன்னும் கணிசமாக இருக்கும் அளவுக்கு அரசியல் மாற்றம், வலுவான தலைமையுடன் கூடிய  ஒருங்கிணைந்த செயல்பாடுகள், பொது மக்கள் பிரச்சினைகள் என களம் காணாதவரை இந்த பரிதாப நிலைமை தொடரவே செய்யும் .. இன்னும் மோசமாகவே கூட ஆகலாம் ..ஆனாலும் தலைவர்கள் சிந்திப்பார்களா ?!...

நன்றி:- தக்கலை கவுஸ் முஹம்மத்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-