அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவில் அவ்வப் போது மத ரீதியான கலவரங்களும் குறிப்பாக இந்து-முஸ்லிம் சர்ச்சைகளும் நிகழ்ந்தேறும் நிலையில் நூறாண்டுகளுக்கு முன் புனித அல்-குர்ஆனை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட இரு இந்துக்கள் நிதியுதவி செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1911 ம் ஆண்டு குர்தித் சிங் அலமோரி எனப்படும் சீக்கியரால் அரபு மொழியிலிருந்து சீக்கியர்களின் குர்முகியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த மொழிபெயர்ப்பினை அச்சிட்டு வெளியிட பகத் புதமால் அடத்லி மெவ்ஜாத் மற்றும் வைத்ய பகத் குரதித் மல் ஆகிய இரு இந்துக்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

இதன் பயனால் அம்ரிட்சரில் இயங்கிய குர்மத் அச்சகத்தில் புத் சிங் என்பவரின் உதவியுடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட அல்-குர்ஆன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது விலைமதிக்க முடியாத இப்பிரதிகளில் ஒன்றை அதனைப் பாதுகாத்து வந்த நூது முஹம்மத் என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள வரலாற்றாசிரியர் சுபாஷ் பரிஹார் இது தொடர்பில் விபரிக்கையில், குர்தித் சிங் அல்-குர்ஆன் சொல்லும் விடயங்களைத் தமது சமூகத்தாரிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் எனும் ஈடுபாட்டில் இவ்வாறு செய்துள்ளதுடன் சமூகத்துக்கு ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இரு இந்துக்களைக் கொண்டே அதன் வெளியீட்டுக்கான செலவைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீக்கியர்களின் இலக்கியங்கள் ஊடாக ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் நிர்ம்லா பிரிவைச் சேர்ந்தவரே குர்தித் சிங் எனவும் அவர் அல்-குர்ஆனின் மகத்துவத்தை எத்தி வைப்பதில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் ‘ஆரிப்’ என அறியப்படும் சர்தார் ஜந்தா சிங் எனும் கவிஞரால் நூர் முஹம்மத் என்பவருக்குப் பரிசாக வழங்கப்பட்ட அல்-குர்ஆன் பிரதியையே தற்போது தனது தேடலின் போது சந்தித்து, குர்முகியிலான அல்-குர்ஆன் பிரதியைத் தாம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சுபாஷ் பரிஹார், 20ம் நூற்றாண்டில் இந்தியாவில் மத ஐக்கியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம் என விபரித்துள்ளார்.

-Jaufer Ibrahim, Sonakar.com

English Version: http://newsbug.lk/2016/05/05/punjabi-quran-had-sikh-translator-hindu-funders/

This article is originally published @ www,sonakar.com. Please do not copy without providing appropriate reference

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-