அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூரில் மாயமானதாக புகார் கூறப்பட்ட கல்லூரி மாணவி ஊர்க்காவல் படைவீரருடன் திருமணம் செய்து கொண்டதால், காதல் தம்பதியினரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவி மாயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மதியழகன்-மாலா தம்பதியின் மகள் விஷ்ணுபிரியா(வயது19). இவர், திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம்ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற விஷ்ணுபிரியா திருச்சி செல்லாமல் பெரம்பலூர் சென்றார். பெரம்பலூரில் இருந்து தனது தாய் மாலாவிற்கு, விஷ்ணுபிரியா போனில் பேசியுள்ளார். அதன்பிறகு நள்ளிரவு ஆகியும் விஷ்ணுபிரியா வீடு திரும்பவில்லை.

மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த விஷ்ணுபிரியாவின் பெற்றோர், இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

ஊர்க்காவல் படை வீரருடன் திருமணம் 

இந்த நிலையில் விஷ்ணுபிரியா பெரம்பலூரில் ஊர்க்காவல்படை வீரரான மனோஜ்குமார்¢ (21) என்பவருடன் காதல் திருமணம் செய்துகொண்டு அவருடன் இருப்பது தெரியவந்தது. உடனே, மனோஜ்குமார்-விஷ்ணுபிரியாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து விஷ்ணுபிரியா பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஷ்ணுபிரியா, காதல் கணவர் மனோஜ்குமாருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதனைத்தொடர்ந்து விஷ்ணுபிரியா-மனோஜ்குமார் இருவரையும் வருகிற 23-ந்தேதி, விசாரணைக்காக மீண்டும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-