அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று இலவச அறிவிப்புகளால் பிசுபிசுத்துப் போய்விட, திமுகவினர் உற்சாகமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் மூலமாக மக்களுக்கு என்னென்ன நன்மைகள் என்று பட்டியலிட்டு பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.2,50,000 மிச்சமாகும் என்று அக்கட்சியினர் பட்டியல் போட்டு பேசுவது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

'மக்களுக்கு மீன் பிடித்து இலவசமாக தரவேண்டாம், மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள்' என்கிற சீனப்பழமொழியை மேற்கோள் காட்டி கீழ்க்கண்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அதனால் மிச்சமாகும் பணம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று அக்கட்சியின் தலைமை நிலையத்திலிருந்து பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தல் சென்றிருக்கிறது.

பால்விலை குறைக்கப்படும்மாத சேமிப்பு : ரூ.210/-வருட சேமிப்பு: ரூ.2,520/-மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங்மாத சேமிப்பு: ரூ.310/-வருட சேமிப்பு: ரூ.4,200 மதுவிலக்குமாத சேமிப்பு : ரூ.1500/-வருட சேமிப்பு : ரூ.18,200முதியோர் உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பயணம்மாத சேமிப்பு : ரூ.1,010/-வருட சேமிப்பு : ரூ.12,620பேருந்துக் கட்டணம் குறைப்பு (குறைந்தபட்சம் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டாலும் கூட)வருட சேமிப்பு : ரூ.900மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு மானியம்மாத சேமிப்பு : ரூ.1000/-வருட சேமிப்பு : ரூ.12,000/-இவை தவிர்த்து கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளால் மேலும் பல்லாயிரம் ரூபாய் மக்களுக்கு மிச்சமாகும்.

திமுக ஆட்சிக்கு வருவதால் வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 தலா ஓர் குடும்பம் சேமிக்க முடியும் என்பதால் ஐந்து ஆண்டு முழுமையான ஆட்சியின் அந்தத் தொகை ரூ.2,50,000 ஆக இருக்கும்.அதிமுக அறிவித்திருக்கும் கைப்பேசி போன்ற இலவசங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், திமுக ஆட்சி அமைந்து மிச்சமாகும் இந்த 2,50,000 ரூபாயை வைத்து என்னென்ன வசதிகளை மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அரசிடம் கையேந்தாமல் தாங்களே கவுரவமாக செய்துக்கொள்ள முடியும் என்றும் திமுகவினர் இன்னொரு பட்டியலை முன்வைக்கிறார்கள்.

* ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட இல்லத்துக்கு அத்தியாவசியமான பொருட்கள் அத்தனையையும் வாங்கிக்கொள்ள முடியும்.* குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கலாம்.* ஒவ்வொரு குடும்பமும் ஒரு இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம்.* அடகுவைத்த நகைகளை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.* வருடத்துக்கு ஒருமுறை குடும்பச் சுற்றுலா செய்யலாம்.* வருங்காலத்துக்காக குறிப்பிட்ட தொகையை இன்சூரன்ஸ் உள்ளிட்ட உருப்படியான திட்டங்களில் சேமிக்கவும் முடியும்.* இன்னும் விருப்பப்பட்டவற்றை தாமே தம் காசில் வாங்கிக் கொள்ள முடியும்.திமுகவினரின் இந்த நூதனப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அதிமுக அறிவித்திருக்கும் இலவசத் திட்டங்களை ஒப்பிடுகையில், திமுக ஆட்சி அமைந்தால் இயல்பாக கிடைக்கக்கூடிய இந்த பலன்களின் தன்மை அதிகம் என்பதால் களத்தில் பிரச்சாரம் செய்யும் அதிமுகவினர் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.

அதுவுமில்லாமல் அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் அறிவித்த இலவசப் பொருட்களின் தரம் படுமோசம் என்பதோடு மட்டுமில்லாமல், அவை அனைவருக்கும் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக மக்களிடையே இருப்பதால் அதை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவினர் தடுமாறி வருகின்றனர்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-