அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், மே.7-

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. நேற்று 99 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. இந்தநிலையில் பெரம்பலூரில் மாலையில் இதமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து சிலநிமிடங்கள் சாரல் மழை பெய்தது. எளம்பலூர், கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, சுற்றுப்புற கிராமங்களில் சாரல் மழை பெய்தது.

மேலும் நேற்று இரவு வி.களத்தூர்,அரும்பாவூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி, தொண்டமான்துறை மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஆனால் வி.களத்தூர் மக்களை மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் , இரவு மின்சாரம் தடை பட்டது. இதனால் வி.களத்தூர் மக்கள் மிகவும் சிரமப்பட்டனார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-