அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
 வி.களத்தூர் ஜாமிஆ பள்ளி வாசலில்   ஷஃபான் பிறை 15-ஆம் நாளான இன்று (22.5.2016) புனிதம் நிறைந்த பராஅத் இரவு இபாதத்கள் சிறப்பாக நடைப்பெற்றது.
    மௌலவி.அப்துர் ரஷீது மிஸ்பாஹீ அவர்கள் பராஅத் இரவின் மேன்மைகளைப் பற்றி உரையாற்றினார்கள்.அவர்களை தொடர்ந்து மௌலவி.அபூ பக்கர் பாக்கவீ (லப்பைக் குடிகாடு) அவர்கள் பராஅத் இரவில் செய்ய வேண்டிய அமல்கள்,ஜியாரத்தின் அவசியம்,நபிவழியை பின் பற்றுவதின் மகத்துவம் போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள்.
     அதன் பின்  ராத்திபு(திக்ர்)மஜ்லீஸ் நடைப்பெற்றது.இறுதியாக அற்பத துஆ கேட்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
    ஜமாத் தலைவர்.T.S.E.லியாகத் அலி,ஜமாத் செயளாலர்.M.பஷீர் அஹ்மது ஆகியோரின் தலைமையின் கீழ் ஜமாத்தார்கள் அனைவரும் தர்காவிற்கு தக்பீர் முழக்கத்துடன் சென்று, ஃபாத்திஹா ஓதி துஆ கேட்கப்பட்டது.அஹ்லே சுன்னத்வல் ஜமாத் பேரவை சார்பில் சீரனி (ஜாங்கிரி,ஷாக்லெட்)அனைவருக்கும் வழங்கப்பட்டு ஸலவாத் ஓதி மஜ்லீஸ் இனிதே முடிந்தது.அல்ஹம்துலில்லாஹ்.


   தகவல்:அஹ்லே சுன்னத்வல் ஜமாத் பேரவை,வி.களத்தூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-