அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தெஹ்ரான்,

ஈரான் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் தலைவர் சையத் அலி காமேனிக்கு 7-ம் நூற்றாண்டை சேர்ந்த குபிக் எழுத்தில் எழுதப்பட்ட அரிய குரான் புனித நூலை பரிசளித்துள்ளார். இந்த அரிய நூல் உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமான ராம்பூர் ராசா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகும்.

ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு பாரசீக மொழியில் தொகுக்கப்பட்ட மிர்சா காலிப் கவிதைகள் அடங்கிய அரிய பழமையான நூலை பரிசளித்திருக்கிறார் மோடி. இந்த நூல் முதல்முறையாக கடந்த 1863-ல் வெளிவந்ததாகும். கல்லியத்-இ-பார்சி-இ-காலிப் என்னும் இந்த கவித்தொகுப்பு நூல் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டதாகும். அதேபோல், பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 1715-ம் ஆண்டை சேர்ந்த அரிய ராமாயண நூலையும் பரிசளித்தார் பிரதமர் மோடி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-