அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஐக்கிய அரபு அமீரகம்….!நீர் மேலாண்மைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்நாட்டை சொல்லலாம்.ஆறுகள் என்று எதுவும் கிடையாது.மிக சொற்ப மழைதான் பெய்யும்.ஆனால் மக்களுக்கு 24 மணி நேரமும் தடை இல்லாமல் குடிநீர் கிடைக்கிறது.

சாலை நடுவிலும்,ஓரங்களிலும் வருடம் முழுவதும் விதவிதமான,பல வண்ண மலர் செடிகள் பூத்துக் குளுங்குகிறது.நடைபாதை ஓரங்களில் புல்வெளி பூங்காக்கள்,கிடைக்கும் இடங்களில் மரங்கள் நடப்படுகிறது.தற்போது வேப்ப மரங்களும்,அரச மரங்களும் அதிகளவில் நடப்பட்டு வருகின்றன.அம்மரங்களுக்கு சொட்டு நீர்பாசன முறையில் எப்போதும் நீர் பாய்ந்துகொண்டே இருக்கிறது.
இதற்கு தண்ணீர்?

கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராகிறது.வீடுகளில் பயன்படுத்தப்பட்டு கழுவுநீராக வெளியேறும் நீர் மறுசுழற்சி முறையில் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு புல்வெளிகள்,மரங்களுக்கு உயிர் நீராகிறது.

நதியே இல்லாத இந்நாடு தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது.

நம் நாட்டில் காடுகள் சுருங்குவதுபோல் இங்கு பாலைவனம் சுருங்க தொடங்குகிறது (நல்ல விஷயம்தானே?)நகரம் விரிவடையும்போ து பாலைவனத்திலும் குடியிருப்புகள் எழுகிறது.அக்குடியிருப்புகளில் மரங்கள் நடப்பட்டு அப்பகுதி சோலை வனமாகிறது.பாலைவனம் சுருங்கி வனப்பரப்பு அதிகரிக்கிறது.மரங்களின் புண்ணியத்தால் ஆண்டுக்காண்டு மழை பொழிவின் அளவு கூடிக்கொண்டு போகிறது.என் கண் முன் நான் கண்டதை எழுதியிருக்கிறேன்.இதை படிப்பவர்கள் தண்ணீரின் அருமையையும்,மரங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டால் எனக்கு மகிழ்ச்சி.

-நீங்கள் படத்தி பார்க்கும் இந்த இடம் 15 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தின் ஒரு பகுதி.இன்று நகர எல்லைக்குள் ஒரு சோலை வனமாய் திகழ்கிறது.சாலை ஓர மலர் செடிகளும்,புல்வெளிகளும்,மரங்களும் பாலைவன சுவடையே அழித்துவிட்டன!

எழுத்து: திரு.நம்பிக்கை ராஜ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-