அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஹாஜி முஹம்மது இஸ்மாயில் சாஹிப் உடன் நான்.
வி.களத்தூர் வடக்கு சின்னதெருவில் உள்ள (மர்ஹூம்) அமீர் பாஷா அவர்களின் மகன்  ஹாஜி முஹம்மது இஸ்மாயில் என்பவர் இன்று   (28-05-16) மதியம் 3.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

 இவர் 104 வயது என்பது குறிப்பிடதக்கது .

இவர் அபு(எ) அபு பக்கர் அவர்களின் தகப்பனார் ஆவர். இவர் நமதூர் இஸ்லாமிய இளைஞர் நற்பணிமன்றம் உருவாக உறுதுணையாய் இருந்தவர் .  ரமலான் மாதம் ஓதுகின்ற சஹர் பையத் பல எழுதியவர் என கூறபடுகிறது .
பொதுநலன்களில் தன்னை முன்னிலைபடுத்திகொண்டவர் ராணுவத்தில் பணிபுரிந்தவர் நமதூர் முக்கிய நிகழ்வுகளை அறிந்து வைத்திருந்தவர் அவர்களின் இறப்பு நமக்கு பேரிழப்புதான் அவர்களை அல்லாஹ் பொருந்திகொண்ட ஆண்மாவாக கபூல்செய்து மறுமைவாழ்க்கையை சிறப்பாக்கிவைப்பானாக ஆமீன்..
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை(29-05-16) காலை 8மணிக்கு நடைப்பெறும். பின் நல்அடக்கம் செய்யபடுகிறது.(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-