அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்புரியாத் : ரியாத்தில் உள்ள ஏர்-இந்தியா உயரதிகாரிகளை ரியாத்வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளாக சிலர் சென்று ஏர்-இந்தியா நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தோம்.தமிழ்நாட்டின் சார்பாக சென்றிருந்த அகமது இம்தியாஸ் பல்வேறு பொதுவான கோரிக்கைகள் வைத்ததுடன் குறிப்பாக திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவைக்குண்டான ஏற்பாடுகள் செய்யும்படி வற்புறுத்தினார்.திருச்சிக்கு பன்னாட்டு விமானசேவை நேரடியாக செய்வதில் விமானநிலைய சட்டதிட்டங்களில் சில சட்டசிக்கல்கள் உள்ளதனை எடுத்துக்கூறி விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினர், அதுவரை மும்பை, சென்னைபோன்ற இடங்களில் வந்திறங்கும் பன்னாட்டு விமானங்களில் திருச்சிக்கு செல்வதற்கு ரியாத் / திருச்சி போன்ற புறப்படுமிடத்திலிருந்தே போர்டிங்பாஸ் விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டதில் அதனை விரைவில் செய்துதருவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-