அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பாடாலூர் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் லாரி கிளீனர், விவசாயி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

லாரிகள் மோதல்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தளவாயில் இருந்து டேங்கர் லாரி தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் (வயது51) ஓட்டி வந்தார். ராஜபாளையத்தை சேர்ந்த நல்ல கணேசன் ராம் (27) கிளீனராக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த டேங்கர் லாரி பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்ற டாரஸ் லாரியின் பின்புறம் திடீரென மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

கிளீனர் பரிதாப சாவு

இதில் டேங்கர் லாரி கிளீனர் நல்ல கணேசன் ராம் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டேங்கர் லாரி டிரைவர் நடராஜன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல்அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார் நல்ல கணேசன் ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-