அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளுக்கு 2016–17–ம் ஆண்டிற்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ‘பிட்டர்’, ‘வெல்டர்’, ‘கார்பெண்டர்’, ‘பெயிண்டர்’, ‘மோட்டார் மெக்கானிக்’, ‘வயர் மேன்’, ‘கேபிள் ஜாயிண்டர்’, ‘எலக்டிரீசியன்’, ‘டீசல் மெக்கானிக்’, ‘பிரிட்ஜ்–ஏசி மெக்கானிக்’ உள்பட பல்வேறு ரெயில்வே பணிகளுக்காக 862 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

15 முதல் 24 வயது உடையவர்கள் இந்த பணிகளில் சேர தகுதியுடையவர்கள். தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மெட்ரிக் மற்றும் ஐ.டி.ஐ. படித்த விருப்பமுள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். www.sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் இதுதொடர்பான முழு விவரங்களையும் பெறலாம். உரிய விண்ணப்பத்தினை ‘டவுன்லோடு’ செய்து கொள்ளலாம். தொழிலாளர் விதிமுறைகள் பின்பற்றி நடத்தப்படும் இந்த தேர்வுகளில், கல்வி தகுதியை கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.100 கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி. மற்றும் பெண்கள் தவிர) சேர்த்து ‘வொர்க்ஷாப் பர்சனல் ஆபிசர், காரேஜ்–வாகன் வொர்க்ஸ், பெரம்பூர், சதர்ன் ரெயில்வே, சென்னை–600023’, என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-