அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவையூர், ரஞ்சன்குடிகோட்டை, மங்கலமேடு, எறையூர், பேரையூர், தைக்கால், வள்ளியூர், மரவநத்தம், பிம்பலூர், இனாம் அகரம், திருவாளந்துறை, பசும்பலூர், வி. களத்தூர் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அவர் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உலகத்தில் நிகழும் அன்றாட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு கல்வித்திறனை அதிகரித்து வருகின்றனர். வேப்பந்தட்டையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்கள்தோறும் தார் மற்றும் மெட்டல் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து பெற வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனுக்கு கிராமப்புற பெண்கள் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கினர். பிரசாரத்தின்போது, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என். சேகர், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன், மகளிரணி நிர்வாகிகள் ராணி, லட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-