அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் வாக்கு சதவீதம் சராசரியாக பதிவாகி விட்டன. ஆனால் வி.களத்தூர் பகுதியில் மக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்கு அளிக்க சென்றனர். ஆனால் நமது ஊரில் சிலருக்கு பூத் சீலிப் வழங்கப்பட வில்லை.பலர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனார்.  பலர் பெயர் ஒன்றாகவும் புகைப்படம் வேறாக மாறி உள்ளது. சிலரின் புகைப்படதிற்க்கு  வேறு ஒருவர் பெயர் உள்ளது.  

எடுத்து காட்டாக வி.களத்தூரில் எனது பெயரையே வாக்காளர் பட்டியலில் நீக்கி உள்ளனர். ஆனால் எனது புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை எண் வயது அனைத்தும் ஒன்றாக உள்ளது.  நான் ஒவ்வொரு வருடமும் புதிய வாக்காளர் பட்டியல் வரும் போது நான் ஆன்லைன் மூலம் செக் செய்வேன். இந்த வருடமும் ஜனவரி 1 ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இருந்தது. ஆனால் மார்ச் இறுதியில் வெளியான பட்டியலில் எனது பெயரை நீக்கி உள்ளனர். இதோ ஆதாரத்துடன்  செய்தி.
 எனது போட்டோ எனது வாக்காளர் எண் சரியாக உள்ளது. ஆனால் பெயர் மாறி உள்ளது.2016 ஜனவரியில் எனது பெயர் உள்ளது. 


சதாம் உசேன் என்ற பெயரில் ஒரு இந்து பெண்ணின் புகைப்படம்.

நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனது பெயரை மாற்ற காரணம் என்று பெரம்பலூரில் கேட்கலாம் என இருக்கிறேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-