அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நாட்டை ஆளுபவர்கள் சாராயம் காய்ச்சி விற்க கூடாது என்று குன்னத்தில் நடத்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
பொதுக்கூட்டம்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் அருள், குன்னம் தொகுதியில் அருண்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் குன்னம் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தண்ணீர் விற்பனை
உலக நாடுகள் அரசு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை சிறப்பாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் அரசு நடத்துகிற எதுவுமே சரியில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தனியார் நடத்துகின்ற அனைத்தும் சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் தண்ணீர் கூட விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. நாம் இரட்டை இலை, உதயசூரியனுக்கு வாக்கு செலுத்தி அடிமைபட்டு கிடக்கிறோம். இதற்கு மாறாக இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்கு அளியுங்கள். ஜெயலலிதா, கருணாநிதி சொல்லுவதை நம்பி ஏமாறாதீர்கள். தற்போது தேர்தல் வாக்குறுதியில் மது கடைகளை மூடுவேன் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூறுகிறது.
ஆட்சியை ஓழிக்க
முந்தைய ஆட்சியாளர்கள் மது கடைகளை மூடி இருக்க வேண்டும். இதற்கு முன்பு என்ன செய்தார்கள். எங்களது பெற்றோர்கள் இந்த தேர்தலில் உங்கள் பிள்ளைகளுக்கு வாக்கு அளிக்க வேண்டும். இலங்கையில் நடந்த போரை யாரும் தடுக்கவில்லை. நாட்டை ஆளுபவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய கூடாது. தற்போதைய தேர்தலில் மாற்றம் தேவை. தமிழர் நாட்டில் தமிழர் தான் ஆள வேண்டும். அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கு எங்களை வெற்றி பெற செய்யுங்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டை விற்க கூடாது. இரட்டை மெழுகுவர்த்தி மாற்றத்திற்கான சின்னம். எனவே குன்னம், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-