அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் நிறுவனங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசு இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவு சான்றிதழ் பகுதி-ஐ மற்றும் பகுதி-ஐஐ ஒப்புகை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது 20.01.2016 முதல் ஒப்புகை வழங்கப்படும் திட்டம் நிறுத்தப்பட்டு மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை 18.09.2015 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி மாற்றியமைத்து உத்யோக் ஆதார் புரிந்துணர்வு என்ற பெயரில் ஒப்புகை வழங்கப்பட்டு வருகிறது.
உத்யோக் ஆதார்
உத்யோக் ஆதார் புரிந்துணர்வு பெற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. உத்யோக் ஆதார் குறிப்பு என்ற இணையதளம் மூலம் பெறலாம். ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பகுதி-ஐ மற்றும் பகுதி-ஐஐ அல்லது சிறுதொழில் பதிவு( எஸ்.எஸ்.ஐ.) 2006-ம் ஆண்டிற்கு முன்னர் பெற்றிருந்தால் இந்த உத்யோக் ஆதார் குறிப்பு பதிவு செய்ய தேவை இல்லை. நிறுவனத்தார் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம். உத்யோக் ஆதார் குறிப்பு எண், உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் உரிமையாளர் பெயரிலும், பங்குதாரர் நிறுவனமாக இருந்தால் நிர்வாக பங்குதாரர் பெயரிலும் இருக்க வேண்டும். உத்யோக் ஆதார் பதிவு செய்ய எவ்வித ஆவணங்களும் அவசியமில்லை. ஒரே ஆதார் எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உத்யோக் ஆதார் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-