அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்).  நேற்று வி.களத்தூர் ஹஜ்ரத் சையது முராத்ஷா அவுலியா தர்ஹாவில் உருஸ் என்னும் சந்தன கூடு விழா துவங்கியது. முதல் நாளான நேற்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு யாசீன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது.   பின் வாணவேடிக்கை விண்ணை தொட்டது. பின் இரவு 9 :30 மணி அளவில் மில்லத் நகர் மதினா தெரு அருகே மலேசியா வானொலி புகழ் மற்றும் மூன் தொலைக்காட்சி புகழ் பிரபல இஸ்லாமிய பின்னணி பாடகர் தேரிழந்தார் தாஜுதீன் ஃபைஜி அவர்களின் மாபெரும் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில்  மக்கள் வெள்ளம் அதிகம் காணப்பட்டது. மேடை ஒரு பக்கம் அமைக்கப் பட்டது. மீதி மூன்று பக்கமும் மக்கள் அதிகம் காணப்பட்டனர்.இரண்டு பக்கம் ஆண்கள் கூட்டமும் ஒரு பக்கம் பெண்கள் கூட்டமும் அலை மோதியது. பல பெண்கள் மெத்தை மாடியில் நின்று கொண்டு இன்னிசை மழையில் நழைந்தனார்.  ஆண்களுக்கு இரண்டு பக்கம் போடப்பட்ட சேர் முழுவதும் நிரம்பி  நிறைய இளைஞர்கள் நின்று கொண்ட கொண்டே கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தேரிழந்தார் தாஜுதீன் ஃபைஜி அவர்கள் நபிகள் நாயகத்தின் சிறப்பு மற்றும் அவுலியாவின் சிறப்புகள் வி.களத்தூர் மக்களுக்கு ஹதீஸ் மூலமும் இன்னிசை மூலமும் மிக சிறப்பான முறையில் எடுத்து உரைத்தார். ஒவ்வொரு பாடல் இடையில் அதன் அர்த்தங்கள் பாமர மக்களுக்கும் புரியும் படி பயன் செய்தார். இந்நிகழ்ச்சி 12:30  மணிக்கு நிறைவு பெற்றது.

இதில் கலந்து கொண்டவர்களிடம் இந்நிகழ்ச்சி எப்படி இருந்தது என கருத்து கேட்டேம்? நாகூர் ஹனிபா அவர்களுக்கு பிறகு நல்ல  கம்பீரமான குரல் என தெரிவித்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்துள்ளதக பலர் கருத்து தெரிவித்தார்.
வி.களத்தூர் - மில்லத் நகர் மக்கள் எளிதாக அச்சமின்றி சென்று வர நமதூர் கல்லாறு முழுவதும் டியுப் லைட் அமைத்து விழா குழுவினர் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-