அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம்பலூரில் தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்து ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேர்தல் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் பணியாற்றிட அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பெரம்பலூர்-துறையூர் சாலையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரிய-ஆசிரியைகளை தினந்தோறும் மாவட்டம் விட்டு, மாவட்டம் அலைக்கழித்து பெரம்பலூரில் தேர்தல் பயிற்சி அளிப்பதாகவும், பயிற்சி மையத்திற்கு வந்து செல்ல பலர் 3 அல்லது 4 பஸ்கள் மாறி, மாறி பயணிப்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இதனை தவிர்த்திட செந்துறை பகுதியிலேயே பயிற்சி வகுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அதை ஒருபொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டி பயிற்சியில் பங்கேற்க வந்திருந்த ஆசிரியர்கள் நேற்று பயிற்சி வகுப்பை புறக்கணித்து பெரம்பலூர்-துறையூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-