அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் வருடதோரும் நர்சரி லிருந்து பிரைமரிக்கும், பிரைமரி லிருந்து உயர் நிலை செல்லும் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ல்

வி.களத்தூர் ஐடியல் மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் நேற்றும் இன்றும் ( 30-5-16 மற்றும் 31-5-16) சிறுவர்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளியில் சிறப்பாக நடந்தது. நேற்று L.K.G. லிருந்து முதலாம் வகுப்பு செல்லும் செல்லும் 100 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. நேற்று காலை 11 மணிக்கு 50 மாணவ மாணவிக்கும், பிற்பகல் 2 மணிக்கு 50 மாணவ மாணவிகளுக்கும், பட்டமளிப்பு நடைப்பெற்றது. இதை பள்ளி தலமை ஆசிரியர் T. முருகன் அவர்கள் வழங்கினார். மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதை பார்த்த பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டனார்.இன்று ஐந்தாம் வகுப்பு லிருந்து ஆறாவது வகுப்பு செல்லும் 39 மாணவ மாணவிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதை இந்த பள்ளியின் செயல் தலைவர் M. கமால் பாஷா அவர்கள் வழங்கினார். இதை பற்றி நமது செய்தியாளர் கமால் பாய் இடம் கேட்டோம். அவர் கூறியதாவது இது பள்ளி சிறுவர்களை ஊக்கப் படுத்தும் ஒரு நிகழ்ச்சி. இதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு மேலும் படிப்பில் ஆர்வர் ஏற்படுகிறது.இது 7 ஆண்டு பட்டமளிப்பு விழா ஆகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-