அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

சேலத்தில் இருந்து சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண் சம்பளம் கிடைக்காமல் சித்தரவதைக்கு ஆளாகி வருவதாக வாட்ஸ் ஆப் மூலம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சேலம் மாநகர பகுதியான சன்னியாசி குண்டு பாத்திமா நகரை சேர்ந்தவர் சலீமாதி இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகளான பர்வீன் பானு திருமணமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதியில் உள்ள ரியாத் நகருக்கு உறவினர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் வேலைக்குச் சென்றுள்ளார்.

வேலைக்குச் சென்று பத்து மாதங்கள் ஆகிவிட்டபோதும், சம்பளம் தரமால் உரிமையாளர் சித்ரவதை செய்வதாக பர்வீன் பானு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு வீடியோ அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. வீடியோவில் தன்னை உடனடியாக மீட்கும்படி பர்வீன் பானு வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-