அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தன்னிகரில்லா சாதனையை பாராட்டி ஜப்பானின் உயரிய விருதான ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் ஜப்பானின் ஃபுகுவோகா நகரின் பெயரில் யகாடோபியா அறக்கட்டளையுடன் இணைந்து ஆண்டு தோறும் ஃபுகுவோகா (Fukuoka Prize) விருது வழங்கப்பட்டு வருகிறது. Grand, Academic, மற்றும் Arts and Culture என மூன்று பிரிவுகளாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டிற்கான Grand Prize இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய தன்னிகரில்லா இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உலகின் உயரிய திரைத்துறை விருதான 'ஆஸ்கர்', இசையுலகின் சிகரமாக கருதப்படும் 'கிராமி', 'ஃபாப்டா', 'கோல்டன் குளோப்' என உலகின் அத்தனை உச்ச விருதுகளையும் தனது கிரீடத்தில் பதித்துள்ள ரஹ்மானுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Academic விருது பிலிப்பைன்ஸ் நாட்டின் வரலாற்று அறிஞரும், பத்திரிகையாளருமான அம்பெத் ஆர்.ஒகாம்போவுக்கும், பாகிஸ்தானின் சிற்பக்கலை வல்லுநரும், கட்டட பொறியாளருமான யாஸ்மீன் லாரிக்கு Arts and Culture அறிவிக்கப்பட்டுள்ளது.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-