அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கிருஸ்தவ பெண்கள் சிலுவை அணிவதை மதிப்பதைப் போன்று முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்கள் மத நம்பிக்கையை பின்பற்றுவதையும் மதியுங்கள் என்று ஃபிரான்ஸ் நாட்டிடம் போப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபிரெஞ்ச் கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இன்னும் “மக்கள் தங்கள் மத நம்பிக்கையை முழுவதுமாக பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்நாட்டில் மத சுதந்திரத்தை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் அதிகப்படியான முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய பகுதியாக ஃபிரான்ஸ் இருக்கிறது. இங்கு 2004 ஆண்டு முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு பொது இடங்களில் முகத்திரை அணியவும் தடை வித்திக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-