அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் அருகே கணவன் கண்முன்னே மனைவியின் காதை மர்ம கும்பல் துண்டாக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தவர்

சென்னை பம்மல் வ.உ.சி. நகர், சூரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது44). இவர் சொந்தமாக கார் (கால்டாக்சி) வைத்துள்ளார். இவரது மனைவி ஜோதி (38). கருணாகரன் நேற்று கரூரில் உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை கருணாகரன் ஓட்டி சென்றார். காரில் அவரது மனைவியுடன் குழந்தைகள் ஸ்ரீகணேஷ¢, கவிதா ஆகியோரும் உட்கார்ந்திருந்தனர்.

காதுமடல் துண்டானது

அப்போது பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக சென்றபோது அந்த காரை வேறொரு வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தனர். பின்னர் அவர்கள் கருணாகரனை சரமாரியாக தாக்கினர். உடனே ஜோதி எழுந்து தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ஜோதியின் இடது காதை பிடித்து இழுத்தனர். இதில் அவரது காதுமடல் துண்டானது. இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பி விட்டனர். மர்ம கும்பலால் காது துண்டிக்கப்பட்ட நிலையில் ஜோதியும், தாக்கப்பட்ட கருணாகரனும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துண்டிக்கப்பட்ட காதுமடலையும், பிளாஸ்டிக் பையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து வந்திருத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வழிப்பறி செய்யும் நோக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார்களா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக கருணாகரனை தாக்கி ஜோதியின் காதை துண்டித்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜோதிக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜோதியின் துண்டிக்கப்பட்ட காதை மீண்டும் இணைப்பது கடினம் என்று கூறியுள்ளதால் ஜோதி தம்பதியினர் காது சிறப்பு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற உள்ளதாக தெரிவித்தனர். கணவன் கண்முன்னே மனைவியின் காதை மர்ம நபர்கள் துண்டாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-