அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கோடைகாலத்தில் அதிக வெயிலால் உடல் சோர்வு, சிறுநீர் தாரையில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மக்காசோளத்தை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மக்காசோளத்தை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் வெங்காயம், சிறிது பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை வேளையில் சாப்பிட்டுவர கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சோர்வு போகும். மக்காசோளம் அற்புதமான மருந்தாகிறது. இதில் மாவுசத்து அதிகம் உள்ளது. மக்காசோளத்தை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள மக்காசோளத்தை சேர்த்து நீர்விட்டு வேகவைத்து காய்ச்சிய பால் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை போடவும். குழந்தைகளுக்கு இந்த சூப் கொடுத்துவர அவர்களுக்கு உடல் புத்துணர்வு ஏற்படும்.

உடலுக்கு பலம் தருவதுடன் உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாவதால் உள் உறுப்புகள் வறண்டு போகும். சிறுநீர் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதை போக்குவதுடன் மக்காசோளம் சரிவிகித உணவாகிறது.

மக்காசோளத்தின் முடியை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மக்காசோளத்தின் முடியை எடுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர சிறுநீரக கோளாறுகள் சரியாகும். சிறுநீரக பாதிப்பு விலகி போகும். சிறுநீரக கற்கள் கரையும். ரத்தத்தில் உப்பு அளவு குறையும். சிறுநீரகம் பழுதாவதை தடுக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு பலம் கொடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

பார்லி அரிசியை பொடி செய்து எடுக்கவும். இதை நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைத்து உப்பு சேர்க்கவும். ஆறவைத்து மோர் சேர்த்து காலை, மாலை குடித்துவர சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். பார்லி அரிசியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இது, நோய் எதிர்ப்புசக்தி உடையது. உடலுக்கு பலம் தருகிறது. கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-