அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர்.


வி.களத்தூர் மே 9.
வி.களத்தூரில் நேற்று மிக சிறப்ப்பாக ஹஜ்ரத் சையத் முராத்ஸா அவுலியா அவர்களின் உரூஸ்(எ) சந்தன கூடு விழா நடைப்பெற்றது.வி.களத்தூர் மக்கள் அவைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்த விழாவை ரசித்தனர்.முன்னதாக 5:30 மணி முதல் இரவு 7;30 மணி வரை  மெளலது ஷெரிப் நடைப்பெற்றது.

பின் இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 1மணி வரை வி.களத்தூர் பேருந்து நிலையத்தில் திரை இன்னிசை நடைப்பெற்றது. 
கடந்த ஆண்டு வந்த வந்த அதே இன்னிசை குழுவே இந்த ஆண்டும் வந்தது. ஆனால் கடந்த ஆண்டு போல கொஞ்சம் சிறப்பாக இல்லை என சிலர் தெரிவித்தனர்.

11 மணிக்கு மேல் மிகவும் லேசன மழை பெய்தது. இதனால் 45 நிமிடங்கள் கச்சேரி நிறுத்தப்பட்டுது. மழை நின்ற உடன் கச்சேரி மீண்டும் துவங்கியது. கச்சேரி 1 மணிக்கு நிறைவு பெற்றது.
பிறகு மாபெரும் வாணவேடிக்கை நடைபெற்றது.  
பிறகு 1:15 மணிக்கு கூத்தாநல்லூர் தப்ஸ் குழுவினர் பாடல்கள் உடன் சந்தன கூடு வீதி உலா வந்தது.நமது ஊரில் அனைத்து தெருக்களிலும் வீதி உலா வந்தன.
பின் சந்தன கூடு அதிகாலை 5மணிக்கு தர்கா வந்து அடைந்து.
விழாகுழுவினர் சார்பாக நன்றி!
இந்த சந்தன கூடு விழா நடத்த அனுமதியும்,  வந்து காவல் காத்த அனைத்து போலிஸ்க்கும் , சிறப்பாக பாதுகாப்பு அளித்த மாவட்ட நிர்வாகதிற்கும் நன்றி .அமைதி காத்து ஒத்துழைப்பு அளித்த  உள்ளூர் வெளியூர் மக்களுக்கு நன்றி.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-